WHEELS - மனிதனின் வளர்ச்சிக்கு முக்கிய காரமாக சக்கரங்கள் எவ்வாறு உதவின என்பதை இக்கட்டுரையில் காண்போம். சக்கரம்: சக்கரம் என்பது வட்ட வடிவிலான ஒரு பொருள். ஒரு அச்சு(axle) தங்கியின் இரு முனையில், மையத்தில் துளை உடைய பொருளை இணைத்து அதில் கடினமான பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு எளிதாக கொண்டுசெல்ல இந்த சக்கரம் உதவுகிறது. மேலும் நம்மால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு பயணிக்கவும் இந்த சக்கரம் உதவுகிறது. WHEEL என்னும் ஆங்கில சொல் வில்வண்டி என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து வந்ததாக மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். உருண்டைக்கல்: மனிதன் தோன்றிய காலம் முதல் மற்ற உயிரினங்களை ஒப்பிடும் போது மிகப்பெரிய பரிணாம வளச்சியை அடைந்துள்ளன. இந்த பரிணாம வளர்ச்சியை மூன்று முக்கிய காரணங்களாக பிரிக்கலாம். முதலாவது மனிதன் இரண்டு கால்களில் நடந்தது, இரண்டாவது மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்தது, மூன்றாவது மனிதன் பேசத்தொடங்கியது. ஆதிகாலத்தில் மனிதன் உயர்ந்த மலைகளில் இருந்து வட்ட வடி...