ENIGMA MACHINE - ஜெர்மன் நாட்டின் நாசிக் படைகள் தங்களது தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்திய தொழில்நுட்பத்தை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ENIGMA MACHINE:
ENIGMA MACHINE என்பது ஜேர்மன் நாட்டு நாசிக் படைகள், வான்வெளி மற்றும் நீர்முழ்கிக்கப்பல் தொடர்பு தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திய கருவி தான் இந்த எனிக்மா மெஷின்.
முதல் எனிக்மா மெஷின்:
முதல் எனிக்மா மெஷின், ARTHUR SCHERBIS(1878 - 1929) என்பவரால் 1918-ஆம் ஆண்டு முதலாம் உலக போரின் இறுதியில் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்றார்.
அதன் பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பின் 1923-ஆம் ஆண்டு உலகிற்கு எனிக்மா மெஷின்-ஐ அறிமுகப்படுத்தப்பட்து.
செயல்பாடு:
1917-ஆம் ஆண்டில் உலகின் பல பகுதிகளில் Rotor - Based Cipher Machine-எனும் எந்திரத்தை கொண்டு உலகின் பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் தான் Arthur. இவர் Rotor-Based Cipher Machine-ஐ வைத்து எனிக்மா மெஷின்-ஐ வடிவமைத்தார். பார்ப்பதற்கு தட்தச்சு எந்திரத்தை போலவே இந்த எனிக்மா மெஷின் இருக்கும். எவர் வேண்டும் என்றாலும் இதை பயன்படுத்தலாம்.
இந்த மெஷின்-ஐ கொண்டு இரு இருதரப்பினார்க்கிடையே ரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
இதில் இருக்கும் மூன்று றோட்டரிகளில் 26 ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி செய்தியை மறைக்கிறது.
பார்ப்பதற்க்கு பொட்டி போல இருக்கும் இந்த எந்திரத்தில், 26 ஆங்கில எழுத்துக்கள் QWERTY KEY வரிசையில் இருக்க. உதாரணத்திற்கு நாம் "A" பொத்தானை அழுத்தினால் இதில் இருக்கும் ரோட்டரிகள் அதற்க்கு நேர்மாரான ஆங்கில எழுத்தை உருவாக்கும்.
ஜெர்மனின் பயன்பாடு:
ஜெர்மன் நாட்டின் விமானப்படை (LUFTWAFFE) மற்றும் கடற்படை (U-boat) உதவியுடன் தன்னை எதிர்த்த அனைத்து எதிரி நாடுகளை தகர்த்தெறிந்து. ஜெர்மனிடம் வலுவான வான்படை மற்றும் அதிக அளவில் கடற்படைகள் இருந்தன.
ஜெர்மனியின் வெற்றிக்கு காரணமாக அவர்களின் வான்படை மற்றும் கடற்படை இடையேயான தகவல் பரிமாற்றங்கள் ஆகும்.
இது எவ்வாறு செயல்பட்டது என்றால், உதாரணத்திற்க்கு "X "-னும் நபர் "Y "-னும் நபருக்கு ரகசியமாக தகவல் கூறவேண்டும் என்றால் X -னும் நபர் எனிக்மா எந்திரத்தை பயன்படுத்தி செய்தியை, Encode செய்து தகவலை அனுப்புகிறது.
எதிர்முனையில் இருக்கும் Y -னும் நபர் அவரிடம் இருக்கும் எனிக்மா எந்திரத்தை வைத்து X-அனுப்பிய செய்தியை Decode செய்து செய்தியை அறிந்துகொள்வார்.
Decode செய்வதற்கான குறியீடுகள் X மற்றும் Y நபர்கள் இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டாம் உலக போரின் துவக்கத்தில் ஜெர்மன் நாடு தனது தகவல் பரிமாற்றத்திற்கு எனிக்மா மெஷின்-ஐ பயன்படுத்த துவங்கியது. இதனால் ஜெர்மன் நாட்டின் தகவல் பரிமாற்றம் எவராலும் அறியப்படாமல் இருந்தது. ஜெர்மணி-ஐ எதிர்த்த அனைத்து நாட்டின் ராணுவ படைகள் தகர்தெறியப்பட்டன.
ENIGMA DECODER:
இரண்டாம் உலக போரின் போது உலகின் மக்கள் தொகை 200 கோடியாக இருந்தது. போரின் போது 8 கோடி மக்கள் இறந்தனர்.
ஜெர்மனின் எதிரி நாடுகளான USA, BRITAIN, FRANCE, CHINA செய்வதறியாமல் முழித்துக்கொண்டிருந்தனர். ஜெர்மனியின் எதிரி நாடுகள் நாசிக் படையினர் encoded communication செய்கிறார்கள் என கண்டுபிடித்தார்கள். அவர்கள் எனிக்மா மெஷின்-ஐ கொண்டுதான் communication செய்கிறார்கள் என அறிகிறார்கள்.
பிரிட்டன் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு நாசிக் படையினர் பயன்படுத்திய எனிக்மா மெஷின்-ஐ கைப்பற்றுகின்றனர். பிரிட்டன் எனிக்மா மெஷின்-ஐ கைப்பற்றிய செய்தியை ஜெர்மனிக்கு தெரியாமல் ரகசியமாக பாதுகாத்து வந்தனர்.
குறிப்பாக பிரிட்டன் நாடு மிகுந்த முயற்சிக்கு பிறகு ஒரு குழு அமைத்தது.
அதில் POLAND, BRITAIN உள்ளிட்ட பல நாட்டு விஞ்ஞானிகளை கொண்ட அணியாக இருந்தது.
விஞ்ஞானிகள் குழுவிற்கு பிரிட்டன், ஜெர்மனியின் encoded செய்தியை decode செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். அவர்கள் அதற்கான வேலையை செய்ய துவங்கினர். ஆனால் எவராலும் ஜெர்மனின் encoded செய்தியை decode செய்ய முடியவில்லை.
முதல் Decoded Message:
விஞ்ஞானிகளின் குழுவில் ஒருவரானவர்தான் ALEN TURING(1912-1954). இவர் ஒரு விஞ்ஞானி மட்டும் இல்லாமல் சிறந்த கணிதவியலாளர். இவர்தான் கணினிக்கு விதை வித்திட்டவர் என கூறலாம்.
இவர்தான் encoded செய்தியை decode செய்ய ஒரு கணக்கீட்டு எந்திரம் தேவை என்று முடிவு செய்து ஒரு எந்திரத்தை உருவாக்குகிறார். இவர் கண்டு பிடித்த எந்திரம் மிகவும் பெரியதாகவும் அதிக எடை கொண்டதாகவும் இருந்தது. அதோடு செயல்படும்போது அதீத சத்தத்தை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது.
இறுதியாக இவர் கண்டுபிடித்த எந்திரம் ஜெர்மன் நட்டு encoded செய்தியை decode செய்து தகவலை தெரிவித்தது. அனால் இந்த எந்திரம் ஒரு செய்தியை decode செய்ய குறைந்தது ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது. இந்த எந்திரம் பற்றி அறிந்த பிரிட்டன் நாடு அலென் டூரிங்கிடம் அதிக பணத்தை அளித்து 200 எந்திரத்தை உருவாக்கி தருமாறு கேட்டது. அந்த எந்திரத்திற்கு அவர்கள் வாய்த்த பெயர் "BOMBE ".
அனால் ஜெர்மன் Bombe எந்திரத்தை பற்றி தெரியாமல் தொடர்ந்து encoded செய்தியை அனுப்பிக்கொண்டே இருந்தது. ஜெர்மன் அனுப்பிய அணைத்து encoded செய்திகளை Bombe எந்திரம் decode செய்து தகவலை தெரிவித்துக்கொண்டிருந்தது.
ALEN TURING - SUPER HERO OF WW II:
இரண்டாம் உலக போரின் முடிவுக்கு Alen Turing-ன் Bombe எந்திரம் முக்கிய பங்காற்றியது. அதனால் அனைவரும் அவரை Super Hero of WW II என அழைத்தனர். மிகுந்த போராட்டத்திற்கும் கஷ்டத்திற்கும் இடையில் தான் அவர் Bombe எந்திரத்தை கண்டுபிடித்தார்.
U -571 திரைப்படம்:
2000-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படமான U -571, எனிக்மா மெஷின் பற்றிய பல தகவல்களை கூறும் வகையில் எடுக்கப்பட்டது. ஜெர்மனியின் எதிரி நாடுகள் எப்படி எனிக்மா மெஷின்-ஐ கைப்பற்றின என்னும் தகவல் திரைப்படமாக வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் ஜெர்மனியின் கடற்படை ஆற்றலையும் அவர்களின் ராணுவத்தை பற்றியும் கூறும் வகையில் இருந்தது. இந்த திரைப்படத்தின் கதை உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்வாகும்.
THE IMITATION GAME - திரைப்படம்:
2014-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஆங்கில திரைப்படம் Alen Turing-ன் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் அவர் எவ்வாறு Bombe எந்திரத்தை கண்டுபிடித்தார் அதற்கு அவர் பட்ட அணைத்து கஷ்டங்களையும் மக்களுக்கு புரிய வைத்தது.
அருமையான பதிவு அண்ணா 👍👏👏
ReplyDeleteநன்றி😊
DeleteSuper da
ReplyDeletetq😊
Delete👏🏻👏🏻
ReplyDeletetq😊
Delete👏
ReplyDeletetq😊
DeleteSuper
ReplyDeletetq😊
Deleteஎனிக்மா மெஷின் பற்றி தெரியாதவர்களுக்கு தெரிவுபடுத்திய admin-க்கு நன்றி
ReplyDeleteநன்றி😊
DeleteThank you👏👏👏
ReplyDeleteநன்றி😊
DeleteAwesome broo very informative 👍looking forward for more🔥
ReplyDeletetq😊
Delete