WHEELS - மனிதனின் வளர்ச்சிக்கு முக்கிய காரமாக சக்கரங்கள் எவ்வாறு உதவின என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
சக்கரம்:
சக்கரம் என்பது வட்ட வடிவிலான ஒரு பொருள். ஒரு அச்சு(axle) தங்கியின் இரு முனையில், மையத்தில் துளை உடைய பொருளை இணைத்து அதில் கடினமான பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு எளிதாக கொண்டுசெல்ல இந்த சக்கரம் உதவுகிறது. மேலும் நம்மால் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு பயணிக்கவும் இந்த சக்கரம் உதவுகிறது.
WHEEL என்னும் ஆங்கில சொல் வில்வண்டி என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து வந்ததாக மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உருண்டைக்கல்:
மனிதன் தோன்றிய காலம் முதல் மற்ற உயிரினங்களை ஒப்பிடும் போது மிகப்பெரிய பரிணாம வளச்சியை அடைந்துள்ளன. இந்த பரிணாம வளர்ச்சியை மூன்று முக்கிய காரணங்களாக பிரிக்கலாம். முதலாவது மனிதன் இரண்டு கால்களில் நடந்தது, இரண்டாவது மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்தது, மூன்றாவது மனிதன் பேசத்தொடங்கியது.
ஆதிகாலத்தில் மனிதன் உயர்ந்த மலைகளில் இருந்து வட்ட வடிவிலான பாறைகள் உருண்டு கீழ்நோக்கி வருவதை பார்த்தான். மலைகளில் இருந்து உருண்டு உருண்டு வருவதால் மனிதன் இதற்க்கு "உருண்டைக்கல்" என பெயர் வைத்தான். அதன் பிறகு அனைத்து வடிவிலான பொருளையும் மலையில் இருந்து உருட்டிவிட்டு எது கீழ்நோக்கி வருகிறது என்று பார்த்தான். இறுதியாக வட்ட வடிவில் இருக்கும் அனைத்து பொருள்களும் உயரத்தில் இருந்து உருட்டி விடும்போது கீழ்நோக்கி வரும் என்பதை கண்டறிந்தால்.
உருண்டை கல்
முதல் சக்கரம்:
இப்படி மலைகளில் இருந்து உருண்டு வரு கல்லில் பல பொருட்களை கட்டி கீழ்நோக்கி உருண்டு வருகிறதா என்று முயற்ச்சி செய்து பார்த்தான். ஆனால் அது உருண்டு வரவில்லை. உருண்டை வடிவிலான கற்களை செதுக்கி வட்ட கற்களாக மாற்றினான். இந்த வட்ட கற்களை உருண்டைக்கற்களை போன்றே மலையில் இருந்து உருட்டிவிட்டான். உருண்டைக்கற்களை போன்றே வட்டக்கற்களும் கீழ்நோக்கி உருண்டு வந்துள்ளது.
செதுக்கிய வட்ட கல்
இறுதியாக ஒரு அச்சு தாங்கியை வடிவமைத்து அதன் இரு முனைகளிலும் உருண்டை வடிவிலான கற்களை பொருத்தி கீழ்நோக்கி உருண்டு வரவைத்துப்பார்த்தான். இந்த அச்சு தாங்கியின் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் இருமுனைகளிலும் இருக்கும் உருண்டை வடிவிலான பொருள் மட்டுமே சுழலும் மாறாக அச்சு தாங்கி சுழலாது. இதை பார்த்த மனிதன் ஆச்சரியப்பட்டு அந்த அச்சு தாங்கியின் மேல் பொருளை வைத்து கீழ்நோக்கி உருட்டிவிட்டு பார்த்தான். இப்போது அந்த பொருளுடன் உருண்டை கற்கள் அழகாக கீழ்நோக்கி உருண்டு வந்தது. இது தான் சக்கரத்தின் முதல் பரிணாம வளர்ச்சி.
அச்சு தாங்கி பொருத்திய சக்கரம்
இதை பயன்படுத்தி மனிதன் காட்டில் வேட்டையாடிய உணவை அந்த அச்சு தாங்கி பொருத்திய வண்டியில் வைத்து சுலபமாக தன் வாழும் இடத்துக்கு கொண்டு வந்தான். அந்த வண்டியை மனிதனே இழுத்து வந்தான்.
மனிதன் கண்டுபிடித்த முதல் வாகனம்
கல்வி பிறந்தது:
இந்த வளர்ச்சி ஏற்பட பல வருடங்கள் எடுத்துக்கொண்டது. மொழி உருவாக ஆரம்பித்த போது இந்த சக்கர தொழில்நுட்பம் உலகின் பல சமூகங்களுக்கு பரவ தொடங்கியது. இந்த கல் தொழில்நுட்பத்தை பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுதான் தான் "கல்வி" என ஆதிகாலத்தில் கூறப்பட்டு வந்தது. பிறருக்கு கற்றுக்கொடுக்கும் இந்த கல்வியின் பொருள் தான் நாம் இன்று பள்ளிகளில் கற்கும் "கல்விக்கு" அர்த்தமாகிறது. கல் கல்வி தான் இப்பொழுது பாட கல்வியாக மாறியுள்ளது.
மரச்சக்கரம்:
கல்லில் செய்த சக்கரம் அதிக எடை கொண்டதாகவும் மேலும் அவை எளிதில் உடைவதை கண்ட மனிதன், உருண்டை வடிவிலான மரத்தை சக்கரமாக மாற்றினான். இந்த மரச்சக்கரம் கற்சக்கரத்தை விட எடை மிகவும் குறைவாகவும் மற்றும் இழுப்பதற்க்கு வசதியாகவும் இருந்தது. இதுவே சக்கர தொழில்நுட்பத்தின் துவக்கம் என்றே கூறலாம்.
அச்சு பொருத்திய மரச்சக்கரம்
கற்காலத்தில் மனிதன் காடுகளிலும் மலைகுகைகளிலும் கூட்டம்மாக வாழ்ந்துவந்தான். அவர்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு நடந்துதான் செல்வார்கள். அப்படி அவர்கள் செல்வதற்க்கு நீண்ட நாட்களும் அதிக தூரமும் ஆனது. மேலும் மனிதன் நீண்டநாள் பயணதின்னால் மிகவும் சோர்வுற்றான்.
மாடு, குதிரை போன்ற விலங்குகளை பயன்படுத்தி மரச்சக்கரத்தை கொண்ட வண்டியை வடிவமைதான். இந்த வண்டியின் மேலே மனிதன் அமர்ந்து நெடுந்தூர பயணத்தை தொடர்ந்தான். இந்த வண்டி பயண நாட்களை குறைத்து பயணத்தை எளிமையாகியது. இவ்வாறாக விலங்குகளை வைத்து பயன்படுத்திய வண்டிதான் பிற்காலத்தில் வாகனங்களாக உருவெடுத்தது.
மனிதன் நெடுந்தூர பயணத்துக்கு பயன்படுத்திய வாகனம்
சக்கர கரம்:
மரச்சக்கரத்தின் எடையை குறைப்பதற்க்காக சக்கரத்தின் உட்பகுதியை வெட்டி எடுத்தனர். வெட்டி எடுத்த மரத்துண்டின் எடையை குறைத்து சிறு மரத்துண்டின் உதவியுடன் அதை இணைத்தனர். அந்த சிறிய மரத்துண்டிற்க்கு "கரம்" என்று பெயரிட்டனர். சக்கரத்தின் வலுவை அதிகரிக்க கரத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர்.
சக்கர கரம்
இரும்புக்காலம்:
கற்காலத்தின் போது மனிதன் கற்களையும் மரத்தையும் மட்டுமே வைத்து சக்கரத்தை வடிவமைத்தான். இரும்பை கண்டுபிடித்து அதை மனிதன் பயன்படுத்திய காலத்தை நாம் இரும்புக்காலம்(iron age) என்று கூறுகிறோம். சாலைகள் உருவாவதற்க்கு முன்பு மனிதன் பயணிக்கும் பாதை குழியாகவும் சிறு கற்களாகவும் இருந்தது. இது மரச்சக்கரத்தை சேதப்படுத்தி வண்டியையும் சேதப்படுத்தியது.
சக்கரத்தின் வலுவை அதிகரிக்க சக்கரத்தை சுற்றி இரும்பு வளையத்தை பொருத்தினர்.மேலும் அச்சு தாங்கியையும் இரும்பால் செய்து பயன்படுத்தினர்.இது சக்கரத்தின் வலுவையும் மற்றும் செயல்பாட்டையும் அதிகரித்தது.
இரும்பு வளையம் பொருத்திய சக்கரம்
வளையம் பொருத்தியதால் வண்டியை இழுக்க உதவிய விலங்குகளின் எண்ணிக்கையை இரண்டாக ஆக்கினார். இந்த வண்டிகள் தான் 1980 - ஆம் ஆண்டு வரை மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இந்த வண்டிகளை வைத்து தான் மனிதன் நீண்ட பயணம் செய்து உலகின் பல பகுதிகளில் வணிகம் செய்தான். அதுமட்டும்மல்லாமல் மனிதனும் பயணிக்க பயன்படுத்தினான்.
வில் வண்டி:
இரும்பு வளையம் பொருத்தியதால் வண்டியில் அதிக அதிர்வுகள் ஏற்பட்டது. அதிர்வை குறைக்க அச்சு தாங்கியையும் வண்டியின் மேல்பகுதியையும் வில் வடிவிலான இரும்பு தகடுகளை பயன்படுத்தி அதிர்வை குறைத்தார். இந்த வில் வடிவ தகடுகளை கொண்ட வண்டிகள் தான் வில் வண்டி என பெயரிட்டனர்.
வில் வண்டியில் பயன்படுத்திய இரும்பு தகடு
வில் வண்டி
இந்த வில் வண்டியின் பெயரில் இருந்துதான் இப்பொழுது பயன்படுத்தும் WHEEL - னும் ஆங்கில எழுத்து தோன்றியது என மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த தகடுகள் வண்டியின் அதிர்வை கணிசமாக குறைத்து பயணத்தை வசதியாக மாற்றியது. இந்த வில் வண்டியில் குதிரைகளையே பயன்படுத்தினர், ஆகையால் இதற்க்கு குதிரை வண்டி என்றும் அழைத்தனர். 1980-ல் இந்த வண்டிகள் அதிக அளவில் வாடகைக்கு கிடைத்தது.
TUBE WHEEL:
மிதிவண்டியை கண்டுபிடித்தபோது அதில் மரச்சக்கரத்தையே பயன்படுத்தினர். பிறகு மரத்திற்கு பதிலாக இருபைக்கொண்டு இருபிச்சக்கரத்தை வடிவமைத்தனர். இரும்புச்சக்கரத்தை கொண்ட மிதிவண்டி சாலைகளில் செல்லும்போது அதிக அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்வை குறைக்க காற்று நிரப்பிய ரப்பர் குழாய்களை பயன்படுத்தினர். ரப்பர் பொருத்திய சக்கரம் சாலையில் செல்லும்போது அதிர்வுகளை குறைத்து பயணத்தை வசதியாகியது.
ரப்பர் குழாய் பொருத்திய சக்கரம்
19-ஆம் நூற்றாண்டில் சக்கரத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது, TUBES, TYRES, SPOKES, ALLOY போன்றவைகள் இடம்பிடித்தார்.
கி.மு 6500-ல் மெசொப்பொத்தாமியாவில் சக்கர வண்டியை கண்டுபிடித்து மனிதர்கள் பயன்படுத்த துவங்கினர். கி.மு.1000-ம் காலகட்டத்தில் தான் சக்கர வண்டிகள் இந்தியாவில் தோன்றின. 19-ஆம் நூற்றாண்டில் என்ஜின்கள் கண்டுபிடித்த பிறகு விலங்குகளுக்கு பதிலாக என்ஜின்கள் பயன்படுத்தினர். இதனால் வண்டியின் வேகம் மற்றும் செயல்பாடு பல மடங்கு அதிகரித்தது.
சக்கரத்தின் பயன்கள்:
19-ஆம் நூற்றாண்டில் உலகின் பல பகுதிகளில் மக்கள் உணவின்றி பட்டினியில் இருந்தனர். அதனால் கார், லாரி, இரயில்களில் உணவு பொருள்களை கொண்டுசென்று அவர்களுக்கு வழங்க முடிந்தது. இதனால் உணவு பஞ்சம் குறைந்தது. இந்த வாகனங்கள் அனைத்தும் சக்கரத்தை கொண்டே இயங்குகிறது. மனித கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியமானது இந்த சக்கரம் என்றால் அது மிகையாகாது.
நடந்து சென்றால் ஒரு நாள் ஆகும் பயணத்தை, சக்கரம் பொருந்திய வாகனத்தில் சென்றால் அரைமணி நேரத்தில் சென்றுவிடலாம். மனித குலமே சக்கரத்தில் தான் இயங்குகிறது. இந்த இயற்கை தான் மனிதனுக்கு சிந்திக்கும் மூளையை கொடுத்துள்ளது.
இப்படி தான் உருண்டைக்கல்லில் இருந்து இன்று நாம் பயன்படுத்தும் TUBELESS TYRE வரை இந்த சக்கரங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது.
சக்கரத்தின் வளர்ச்சி
Comments
Post a Comment