பாரதியார் கவிதைகள்:- பாரதியார் இயற்றிய கவிதைகளில் இடம்பெற்றிருக்கும் "ஞாயிறு-வணக்கம் " மற்றும் "வெண்ணிலா" என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் பாடலை காண்போம். ஞாயிறு - வணக்கம் கடலின் மீது கதிர்களை வீசிக் கடுகி வான்மிசை ஏறுதி யையா, படரும் வானொலியின்பத்தைக் கண்டு பாட்டுப் பாடி மகிழ்வன புட்கள். உடல் பரந்த கடலுந் தனுள்ளே ஒவ்வொர் நுண்டுளியும்விழி யாகச் சுடரு நின்றன் வடிவையுட் கொன்டே சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே. 1 என்ற னுள்ளங் கடலினைப் போலே எந்த நேரமும் நின்னடிக் கீழே நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும் நின்றன் ஜோதி நிறைந்தது வாகி நின்று வாழ்ந்திடச் செய்குவை யையா, ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா! மன்று வானிடைத் கொண்டுல கெல்லாம் வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 2 காதல் கொண்டனை போலும்மண்மீதே, கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே! மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல் மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை; சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்று கின...